இலங்கை அணி 184 ஓட்டங்களால் அபார வெற்றி




 


இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 184 ஓட்டங்களால் அபார வெற்றியை ஈட்டியுள்ளது.

கண்டி, பல்லேகலை மைதானத்தில் பகலிரவுப் போட்டியாக இடம்பெற்ற போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 254 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க 55 ஓட்டங்களையும், சரித் அசலங்க 52 ஓட்டங்களையும் பெற்றனர்.