அந் நூர் மாலை நேர அல்குர்ஆன் மதரசாவின் 17வது கௌரவிப்பும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்




 


அக்கரைப்பற்று அந் நூர் மாலை நேர அல்குர்ஆன் மதரசாவின் 17வது கௌரவிப்பும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நேற்று நடைபெற்றது.


அல்குர்ஆனை பூரணமாக ஓதி 3வருட கற்கை நெறியினை வெற்றிகரமாக நிறைவு செய்த ( 2020 மற்றும் 2021ம் ஆண்டு batch ) 47 மாணவ,மாணவிகளுக்கான மேற்படி நிகழ்விற்கு அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் சட்டத்தரணி T. M. Mohamed Anzar சேர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
மதரசாவின் அதிபர் மௌலவி M. I. சம்சுதீன் ( ஓய்வு பெற்ற அதிபர் ) அவர்களின் தலைமையில் அந் நூர் மாலை நேர பாடசாலையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் M. H. M. Mukthar Husain Mohammed அவர்கள் கௌரவ அதிதியாகவும்,
அக்கரைப்பற்று ஜம்மியத்துல் உலமாவின் இணை செயலாளர் ஆசிரியர் அஷ் ஷேக் அல் ஹாபிழ் S. அப்துல் ஹாதி அவர்களும்,
ஏறாவூர் அஷ்பால் அகடமியின் பணிப்பாளர் அஷ் ஷேக் அல் ஹாபிழ் M. L. M Irsath காரி அவர்களும்,
அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் அஷ் ஷேக் A. W. Aashiq Ahamed அவர்களும்,
அட்டாளைச்சேனை வின்னேர்ஸ் அகடமியின் பணிப்பாளர் ஆசிரியர் மௌலவி N. M Mohamed Nishath (ஷர்கி) அவர்களும் விசேட அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
₹ அந் நூர் மாலை நேர பாடசாலையில் கடந்த 12வருடங்களாக தொடர்ந்தும் அதிபராக கடமை புரிந்து வரும் மௌலவி M. I. Samsudeen ( இஸ்லாஹி ) அவர்களின் அர்ப்பணிப்பானதும், நேர்மையானதுமான சேவையினை பாராட்டி அந் நூர் நிறுவனம் சார்பாக அக்கரைப்பற்று பிரதேச செயலாளரினால் அவருக்கு பொன்னாடை போர்த்தி, நினைவு சின்னம் வழங்கி பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
₹ அத்துடன் அந் நூர் முன்பள்ளி பாலர் பாடசாலையில் தொடர்ந்தும் 12வருடங்களாக ஆசிரியையாக கடமையாற்றி வரும் A. Asrin Jazana மற்றும் J. Aswara அவர்களது அர்ப்பணிப்பானதும், நேர்மையானதுமான சேவையினை பாராட்டி அந் நூர் நிறுவனம் சார்பாக Dr. U. L Nihaya மற்றும் ஆசிரியை A.S. S. Nuwaira அவர்களினால் பொன்னாடை போர்த்தி, பிரதேச செயலாளர் அவர்களினால் நினைவு சின்னம் மற்றும் பண்ணப்பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
இவ் கௌரவிப்பு நிகழ்வினை அந் நூர் நிறுவனத்தின் சார்பாக L. A. Fathima Rusana அவர்கள் மிக சிறப்பாக நடாத்தி வைத்தார்கள்.
இந்நிகழ்வுக்கு எமது அழைப்பினை ஏற்று பிரதம அதிதியாக வருகை தந்து பூரணமாக கலந்து சிறப்பித்த பிரதேச செயலாளர் அன்சார் சேர், உட்பட ஏனைய கௌரவ, விசேட அதிதிகள், பெற்றோர்கள், ஆசிரியைகள் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் அந் நூர் நிறுவனம் தனது மனப்பூர்வமான நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.