இயற்கையை நாம் பாதுகாத்தால் இயற்கை நம்மை பாதுகாக்கும்;. பொங்கல் விழா





 (சுகிர்தகுமார் 0777113659)


  இயற்கையை நாம் பாதுகாத்தால் இயற்கை நம்மை பாதுகாக்கும்;. இதனாலேயே இயற்கையினை பாதுகாப்பதோடு இயற்கை தெய்வங்களுக்கு நன்றி தெரிவிக்கும் பாரம்பரியத்தை இந்து மதம் பின்பற்றி வருகின்றது. இதன் ஒரு அங்கமாகவே இயற்கை தெய்வமான சூரியபகவானுக்கு நன்றி தெரிவிக்கும் தைத்திருநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது என ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தெரிவித்தார்.
ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தின் ஏற்பாட்டில் இந்துமாமன்ற கட்டடத்தில் இன்று நடைபெற்ற பொங்;கல் விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள களப்பு நிலப்பரப்பு இறைவனால் நமக்கு அளிக்கப்பட்ட கொடை. இதனை மண்ணிட்டு நிரப்பி இல்லாது செய்வதனால் எமது சந்ததி பாரிய பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக விவசாயிகள் இதனால் பெரும் சிக்கலை எதிர்கொள்வர்.
நமது பிரதேசத்தில் உள்ள சுமார் 8600 ஏக்கர் நிலப்பரப்புள்ள விவசாய காணியின் வடிச்சல் நீரை சேமித்து வைக்க கூடிய ஒரே இடம் களப்பு மாத்திரமே ஆகும். இதனை இல்லாது செய்வதனால் வடிச்சல் நீரும் முற்றாக வெளியேறி குடிநீர் உள்ளிட்ட பெரும் தட்டுப்பாட்டினை நாம் எதிர்கொள்ள வேண்டிவரும். ஆகவேதான் இதுபோன்ற இயற்கை வளங்களை நாம் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.
மன்றத்தின் தலைவர் வே.சந்திரசேகரம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியான பிரதேச செயலாளர்; வரவேற்கப்பட்டார்.
பின்னர் குத்துவிளக்கேற்றப்பட்டதுடன் நந்திக்கொடியினையும் பிரதேச செயலாளர் ஏற்றி வைத்தார்.
இதேநேரம் நடைபெற்ற பொங்கல் பூஜை வழிபாடுகளிலும் பிரதேச செயலாளர் உள்ளிட்ட கலாசார உத்தியோகத்தர் நிசாந்தினி தேவராஜ் உள்ளிட்ட மன்றத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செயலாளரும் அதிபருமான ஸ்ரீ மணிவண்ணன் அதிதிகளை வரவேற்று உரையாற்றியதுடன் மண்ணின் மைந்தன் ஒருவர் பிரதேச செயலாளராக இருப்பதையிட்டு பெருமிதம் கொள்வதாக கூறினார். மேலும் அவரோடு இணைந்து பிரதேசத்தின் அபிவிருத்திக்கு பங்காற்ற இந்துமாமன்றம் எவ்வேளையிலும் தயாராக இருப்பதாக கூறினார்.
தற்போதைய ஜனாதிபதி முன்னெடுத்துள்ள பசுமை புரட்சி மற்றும் சேதனப்பசளை மூலமான பயிர்ச்செய்கையினையே பல வருடங்களுக்கு முன்னர் நமது முன்னோர் பின்பற்றினர். இதனையே இன்று பின்பற்றுகின்றனர் என மன்றத்தின் தலைவர் வே.சந்திரசேகரம் கூறினார். மேலும் உழவருக்கு உதவி செய்யும் சூரியபகவான் மற்றும் பசுக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் பாரம்பரியத்தையும் இந்துமதம் இன்றும்; கடைப்பிடித்து வருகின்றது என்றாh