அம்பாறை மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் மகாநாடும் தரம்-01 இற்கு பதவி உயர்வு பெற்றவர்களுக்கான நியமன கடிதம் வழங்கும் நிகழ்வும்




 


வி.சுகிர்தகுமார் 0777113659 

 
  அம்பாறை மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் மகாநாடும்  தரம்-01 இற்கு பதவி உயர்வு பெற்றவர்களுக்கான நியமன கடிதம் வழங்கும் நிகழ்வும் இன்று அம்பாறை சம்மாந்துறை அப்துல் மஜீட்  மண்டபத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஐ.எச்.ஏ.வஹாப் தலைமையில் நடை பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை சமூர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜெகத்குமார சுமித்ரா ஆராய்ச்சி மற்றும் வனஜீவராசிகள் இராஜங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்காவின் செயலாளர் அஞ்சன திஸாநாயக்கா கலந்து கொண்டு அம்பாறை மாவட்டத்தில் தரம்-01 க்கு பதவி உயர்வு பெற்ற சுமார் 150 தமிழ்,முஸ்லிம்,சிங்கள சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு பதவியுயர்வு கடிதங்களை வழங்கி வைத்தார்.
இதன்போது உள்ளிட்ட அகில இலங்கை சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்க உறுப்பினர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத்குமார சுமித்ரா ஆராய்ச்சி மற்றும் வனஜீவராசிகள் இராஜங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்காவின் செயலாளர் அஞ்சன திஸாநாயக்கா உள்ளிட்டவர்களுக்கு சங்கத்தின் தலைவர் உள்ளிட்டவர்கள் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தனர்.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்
நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் சங்கத்தின் பொதுச்செயலாளர் எனும் நிலையில் நடு நிலையாக செயல்படுகின்றேன். எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் உத்தியோகத்தர்கள் நலனுக்காக குரல் கொடுப்பேன்.
இந்நிலையில் நல்லாட்சி காலத்தில் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். ஆயினும் இந்த அரசாங்கத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர்களின்; 75 சத வீதமான பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளோம். மீதமாகவுள்ள 25 சத வீத பிரச்சினைகளுக்கும் ஓரிரு மாதங்களில் தீர்வு காண்போம்; என்றார்.

கொரோனாவால் உலக வல்லசு நாடுகளே பாதிக்கப்பட்டுள்ளன அந்த வகையில் இலங்கையிலும் 2 வருடமாக நாடு மூடப்பட்டு சுற்றுலா துறை மற்றும் ஏற்றுமதி இறக்குமதி பாதிக்கப்பட்டு 1500 கோடி ரூபா நஸ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு பொருளாதாரத்தில் சற்று பின்னடைவு கண்டுள்ளது. ஆயினும் நாடு எதிர்காலத்தில் நல்ல நிலைக்கு வரும் என்றார்.