அக்கரைப்பற்று அபிவிருத்தி தொடர்பில், ஆலோசனை




 


அக்கரைப்பற்று அபிவிருத்தி தொடர்பில் அதாஉல்லா எம்.பியின் பங்கேற்புடன் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் !


நூருல் ஹுதா உமர்


பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.எம்.எம்.அன்சார் தலைமையில் அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்  திங்கட்கிழமை இடம்பெற்றது. இதில் தேசிய காங்கிரஸ் தலைவரும், திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டு எதிர்காலத்தில் கிராம மட்டத்தில் மேற்கொள்ளவிருக்கும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்  தொடர்பாக அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.


அரசின் சுபீட்சமான நாட்டைக் கட்டியெழுப்புதல் எனும் தொனிப்பொருளில் கிராமங்களை எழுச்சிமிக்கதாய் மாற்றுதல் வேலைத்திட்டத்தின் கீழ்  பிரதேசத்திலுள்ள கிராம சேவகர் பிரிவுகளை அபிவிருத்தி செய்வது தொடர்பாக இங்கு ஆராயப்பட்டது. குறித்த கலந்துரையாடலில்  அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அஹமட் ஸகீ , அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. றாசீக், அக்கரைப்பற்று உள்ளுராட்ச்சி மன்ற   உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜே.எம்.வஸீர், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய உயர் அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாநகர சபை உத்தியோகத்தர்கள், கிராம சேவை அதிகாரிகள், கிராம மட்ட அமைப்பினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.