(க.கிஷாந்தன்)
வட்டவளை பொலிஸ் பிரிவில் கரோலினா பகுதியில் 15.10.2021 வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அட்டன் - கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை கரோலினா பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வீதியில் வழுக்கி விபத்துக்குள்ளானதில் அதனை செலுத்திய நாவலப்பிட்டி பகுதியை சேர்ந்த 24 வயதுடைய எந்தனி டொமினிக் என்ற இளைஞரே இவ்வாறு பலியாகியுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
வட்டவளை பகுதியில் தமது பணியினை நிறைவு செய்துவிட்டு நாவலப்பிட்டி பகுதிக்கு மோட்டார் சைக்களில் பயணித்துக் கொண்டிருந்த போது மழையுடன் கூடிய காலநிலைக் காரணமாக வீதியின் வழுக்கல் நிலையினால் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியில் வழுக்கியதால் இந்த விபத்து சம்பவித்து இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் மோட்டார் சைக்கிளை செலுத்தியவரின் தலைக்கவசமும் முறையாக தலையில் பொருத்தப்படாதிருந்ததால் அது தலையில் இருந்து கழன்று சென்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் வட்டவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படு
Post a Comment
Post a Comment