ஆலையடிவேம்பு தெற்கு சமுர்த்தி வங்கி கிளையில் வாணி விழா




 


வி.சுகிர்தகுமார் 0777113659   


  ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு தெற்கு சமுர்த்தி வங்கி கிளையில் வாணி விழா பூஜை வழிபாடுகள் இன்று(14) சிறப்பாக இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு தெற்கு வங்கிக்கிளையின் முகாமையாளர் கே.அசோக்குமார்  தலைமையில் இடம்பெற்ற பூஜை வழிபாட்டு நிகழ்வுகளில் பிரதேச செயலாளர் வி.பபாகரன்  சிறப்பு அதிதியாக கலந்து கொண்டதுடன் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் தலைமையக சமுர்த்தி முகாமையாளர் என்.கிருபாகரன் முகாமைத்துவ பணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன் கருத்திட்ட முகாமையாளர் ஆர். மதியழகன் உள்ளிட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் வங்கி உத்தியோகத்தர்கள்; என பலரும் கலந்து கொண்டனர்.

 வாணி விழாவில் சுகாதார நடைமுறைகளுடன் ஒன்று கூடிய உத்தியோகத்தர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் துர்க்கா லெட்சுமி சரஸ்வதி தேவிகளின் பஜனைப்பாடல்களையும் பாடியதுடன் சகலகலா வல்லி மாலையும் பாடப்பட்டு பூஜை வாழிபாடுகளிலும் பங்கேற்றனர்.

 வங்கி கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்கள
வாணி விழாவானது வங்கி கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் பங்களிப்பு அமைவாக உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்புடன் இடம்பெற்றமை வரவேற்கத்தக்கதாக அமைந்தது.
வாணி விழா கொண்டாடங்களினால் ஆலையடிவேம்பு தெற்கு சமுர்த்தி வங்கி கிளை அலங்கரிக்கப்பட்டு விழா கோலம் பூண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதர்கும்.