லண்டன்:
பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சர் டேவிட் அமெஸ் (வயது 69) இன்று எஸ்செக்ஸ் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, அவரை மர்ம நபர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த எம்பி அமெஸ், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவக்குழுவினர் எம்பிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
எம்பி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எம்பி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பிரிட்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட எம்பி சர் டேவிட்டுக்கு 5 பிள்ளைகள் உள்ளனர். அவரது குடும்பத்தினருக்கு பல்வேறு தலைவர்களும் ஆறுதல் கூறி உள்ளனர்.
Post a Comment
Post a Comment