ஐக்கிய நாடுகள் சபையின் 16ஆவது காலநிலை மாற்றத்திற்கான இளைஞர் மாநாடு இம்மாதம் 28ஆம் திகதி ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஆரம்பமாகவுள்ளது. இம்மாநாட்டில் இலங்கை பிரதிநிதிகளாக பங்கேற்க இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
சம்மாந்துறையைச் சேர்ந்த முஹம்மட் நிப்ராஸ் மற்றும் கண்டி, கெலிஓயவைச் சேர்ந்த முஹம்மட் சப்ராஸ் ஆகியோரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஐ.நா. சபையின் UNFCCC அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த மாநாடு ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. மேலும் கிளாஸ்கோ நகரில் நவம்பர் முதலாம் திகதி ஆரம்பமாகும் ‘COP26’ எனும் மற்றுமொரு மாநாட்டிலும் மொஹமட் நிப்ராஸ் இலங்கை பிரதிநியாக பங்கேற்கவுள்ளார்.
மேற்படி இரு இலங்கை பிரதிநிதிகளும் இம்மாதம் 21ஆம் திகதி ஸ்கொட்லாந்து செல்லவுள்ளதுடன், ATG Ceylon (Pvt) Ltd நிறுவனம் அவர்களுக்கான பிரயாண ஏற்பாடுகளை செய்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment