வி.சுகிர்தகுமார் 0777113659
இளைஞர்களும் விளையாட்டுக்கழகங்களும் அரசாங்கத்துடனும் விளையாட்டுத்துறை அமைச்சுடனும் இணைந்து செயலாற்றும்போது மாத்திரமே எமது பிரதேச விளையாட்டுக்கழகங்களின் தேவையினை பூர்த்தி செய்ய முடியும் என நீர் வழங்கல் அமைச்சின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளர் பியசேன கிருத்திகனால் தெரிவிக்கப்பட்டது.
அவ்வாறு இணைந்து செயற்படுகையில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் உதவியோடு அம்பாரை மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானங்கள் புனரமைக்கப்படுவதுடன்; பிரதேச விளையாட்டு கழகங்களின் தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் அவரால்; உறுதிமொழி வழங்கப்பட்டது.
கல்முனை தமிழ் பிரிவு பாண்டிருப்பு விளையாட்டுக்கழக உறுப்பினர்களுக்கும் நீர் வழங்கல் அமைச்சின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளர் பியசேன கிருத்திகனுக்கும் இடையிலான சந்திப்பொன்று அக்கரைப்பற்று பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது கருத்து தெரிவித்த விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் கல்முனை தமிழ் பிரிவில் 10க்கும் மேற்பட்ட விளையாட்டுக்கழகம் இருந்த பொழுதும் நிறைவான பொருத்தமான விளையாட்டு திடல் ஒன்று இல்லாதது பெருத்த குறையாக காணப்படுவதுடன் இளைஞர்களின் திறமைகளை வெளிக்காட்டுவதற்கு தடையாக இந்த குறை இருப்பது இப்போது வாழும் இளைஞர்களுக்கு மிகுந்த மனவேதனையை தருகிறது. கடந்த காலத்தில் எம்மை தவறாக வழி நடத்திய உள்ளூர் தலமைகளின் கவலையீனங்களினால் சரியான அரசியல் தலமையை பின் தொடர்ந்து எங்கள் தேவையை நிறைவாக பெற முடியாமல் போனது துரதிஷ்டமே ஆகும். வருங்காலத்தில் இவ்வாறான தவறுகள் நடைபெறாது அரசுடன் பயணித்து விளையாட்டு மைதானம் மட்டுமல்லாது எங்கள் பகுதியில் காணப்படும் அனைத்து அபிவிருத்தி அவலங்களையும் சீர்படுத்தி செம்மையான அரசியல் பயணம்செய்ய நாங்கள் திடசங்கற்பம் பூண்டுள்ளோம் என்றனர்.
இதற்கு பதிலளித்த கிருத்திகன் நிட்யமாக கழகத்தின் தேவைப்பாடுகள் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முடிந்தவரையிலான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படும் என்றார்.
இச்சந்திப்பில் கழக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment
Post a Comment