அக்கரைப்பற்று பிரதேச சபை மக்களுக்கான ATMமெஷின்








அக்கரைப்பற்று பிரதேச சபை உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து பிரதேச மக்களின் அத்திய அவசிய தேவை கருதி ATM  மெஷின்  பொருத்த வேண்டும் என்பதற்காக  எடுத்துக்கொண்ட முயற்சி திருவினை ஆக்கியிருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்


பிரதேசசபையினுடைய பரிணாமத்தில் இதுவும் ஓர் வரலாற்றுப் பதிப்பு. 


பிரதேச சபைக்கு முன்பாக பூரணப்படுத்த பட்ட பாதுகாப்போடும், தபால் அலுவலகத்தையும் கருத்திற்கொண்டதாய் மக்கள் வங்கியின் (People's Bank)  பணப் பரிமாற்றம் செய்யும் ATM மெஷின் பொருத்துகின்ற நிகழ்வு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது 

அல்ஹம்துலில்லாஹ்.


இதனுடைய உருவாக்கத்திற்கு வித்திட்ட அத்தனை பேரும் இதனுடைய நன்மைக்கும் பெருமைக்கும் உரியவர்கள். பிரதேசசபையினுடைய ஆரம்பகால (முன்னாள்)  கௌரவ உறுப்பினர்களிலிருந்து இப்போது ஆட்சியில் இருக்கின்ற கௌரவ உறுப்பினர்கள் வரை அத்தனை பேருடைய தோள் கொடுப்பும் இம்முயற்சியில்  வேரூன்றி இருக்கிறது.(சபையினுடைய செயலாளர் தொடக்கம் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் வரை) 


அதாவுல்லாஹ் என்ற அக்கரையூரின் அரசியல் அதிகாரத்தின்   கச்சிதமும், கம்பீரமுமான  தெள்ளத் தெளிவானதொரு தொலைபேசி அழைப்பும்,


மக்கள் வங்கியினுடைய அக்கரைப்பற்று கிளை முகாமையாளர் சகோதரர் MBM. அன்வர் அவர்களின் தேவைக்கேற்ற சிபாரிசுகளும், இதற்கான எல்லாப் பயணங்களிலும் பங்குகொண்டு, எதிர்கொண்ட ஒவ்வொரு சவால்களிலும் கூட்டாய் முயற்சித்து வெற்றி தொடும் வரை தோள் கொடுத்த 


மதிப்புக்குரிய

அல்ஹாஜ் ஹஸன்  மவுலானா (பிரதமரின் முஸ்லிம் சமூகத்திற்கான இணைப்புப் பிரதிநிதி) 


மதிப்புக்குரிய தாஜூதீன் sir (கல்வி அமைச்சின் மேலதிக கல்வி வெளியீட்டு ஆணையாளர்) 


மதிப்புக்குரிய பொறியியலாளர் சிராஜுதீன் engr (ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொறியியலாளர் RDA)  


இவர்களுடன் ஆரம்ப அனுமதிக்காய் ஆவணங்களைச் சமர்ப்பித்த போது கட்சி பேதம் பாராமல்  கையெழுத்திட்ட  காலம்சென்ற சிவஞானசோதி ஐயா (அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுடைய பிரத்தியேக செயலாளர்)  அவர்களையும் இந்த இடத்தில் சுவாசத்தோடு நினைவுபடுத்திக் கொள்கிறேன்.  


இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் இது  மக்களின் பாவனைக்காக கோலாகலமாக திறந்து வைக்கப்படும் 


நமது உடன்பிறப்பு களுக்காக இது சமர்ப்பணம


இதனுடன் (HNB) வங்கியினுடைய இன்னுமொரு ATM  கிடைக்க வேண்டும் என்பதற்காக கௌரவ உப தவிசாளர் சகோதரர் ஏ.எம்.அஷ்ஹர் அவர்களின் ஊடாக விண்ணப்பிக்க ப்பட்டுள்ளது. கிடைக்கின்ற போது எம் மக்களுக்கும் எமக்கும்  இரட்டிப்பு மகிழ்ச்சி அல்ஹம்துலில்லாஹ்