ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய விசேட நீதிபதிகள் குழு நியமனம்




 

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறுத் தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் 26 குற்றவாளிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க மூவர் அடங்கிய விசேட நீதிபதிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த தலைமையிலான அந்த நீதிபதிகள் குழாமில், அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகிய நீதிபதிகள் அடங்குகின்றனர்.

_ Kayal