மொடர்னா தடுப்பூசி பெற்றவர்களா நீங்கள்..? ஓர் மகிழ்ச்சியான செய்தி...... இதோ...!




 


பைசர் தடுப்பூசியின் ஊடாக கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை விட, இரண்டு மடங்குக்கு மேலான நோய் எதிர்ப்பு சக்தியை மொடர்னா தடுப்பூசி வழங்குவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு உயிரியல் துறையின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில், பைசர் தடுப்பூசியின் ஊடாக கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை விட, இரண்டு மடங்குக்கு மேலான நோய் எதிர்ப்பு சக்தியை மொடர்னா தடுப்பூசி வழங்குவதாகவும் பெல்ஜியத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றிலேயே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

- Kayal