நாடளாவிய ரீதியில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் மெனிங் சந்தை ஆகியன மொத்த விற்பனைக்காக திறக்கப்பட்டுள்ளன.
வர்த்தகர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் போக்குவரத்து அனுமதியினை தங்களது பிரதேச செயலங்களின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியிலான கொவிட்-19 தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் தங்களது உற்பத்திகளை விற்பனை செய்வதற்கும், மொத்த விற்பனையாளர்கள் நடமாடும் விற்பனையின் பொருட்டு விவசாய உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் இன்று திறக்க அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- Kayal
Post a Comment
Post a Comment