#இஸ்மாயில்_உவைசுர்ரஹ்மான்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் இனது 10 வது சிரார்த்த தினத்தை முன்னிட்டு சமூக செயற்பாட்டுக்காகவும், விரைவாக செய்திகளை செயற்பாட்டுடன் வலைத்தளங்fளில் வழங்fp வந்தமைக்காகவும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட வட இலங்கைச் செய்தியாளர் பிரகாஸ் ஞானப் பிரகாசம் இன்று கொரொனா தொற்றினால் காலமானார்.
இலங்கையின் வட புலத்திலிருந்து செய்திகைளை அச்சு மின்ம ஊடகங்களுக்கு வழங்கிய பிரகாஸ் ஞாகப் பிரகாசம் கொரொனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் தமது ருவிற்டர் பக்கத்தில், கடந்த 5 நாட்களாக கடுமையான காய்ச்சலுக்கு உள்ளானதாக தெரிவித்திருந்தார்.
கொரோனோ தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த சுயாதீன ஊடகவியலாளனான ஞா.பிரகாஸ் (வயது 26) 25.10.2018ஆம் ஆண்டு "பிரகாஸ் எனும் நான்" எனும் தலைப்பில் தன்னை பற்றியும் , தன்னை தாக்கிய நோய் பற்றியும் , முகநூலில் பதிவினை வெளியிட்டார். www.tamilnews1.com
மூன்று பாகங்களாக முகநூலில் அவர் வெளியிட்ட பதிவினை பலரும் நூல் வடிவில் அதனை கொண்டு வருமாறு கோரியிருந்தனர்.
அக்கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து , தனது சுயசரிதையை எழுதும் பணிகளை ஆரம்பித்திருந்தார். அந்நிலையில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்த நிலையில் 02. 09.2021 இன்று உயிரிழந்தார்.
Post a Comment
Post a Comment