பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
நாட்டில் கொரோனா தொற்றினை கட்டுப் படுத்தும் முகமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் சிறப்பான முறையில் இடம்பெற்று வருகிறது.இந்நிலையில்கல்முனை பி
ராந்திய சுகாதார சேவைகள் பணிப்
பாளர் ஜீ. சுகுணனின் நெறிப்படு
த்தலில்,கல்முனை தெற்கு சுகாதா
ர வைத்திய பிரிவில் முதலாவது
தடுப்பூசி பெற்ற 30 வயதிற்கு மே
ற்பட்டோருக்கு இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை
கள் கல்முனை தெற்கு சுகாதார வைத்தி
யஅதிகாரி ஏ. ஆர்.எம்.அஸ்மி தலைமையில்கடந்த திங்கட்கிழமை(30) அன்று ஆரம்பமாகி இருந்தது.
இதனடிப்பையில் கல்முனை அல்- மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் பொது மக்கள் ஆர்வத்துடன் வருகை தந்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தடுப்பூசியை மூன்றாவது நாளான இன்று (1) பெற்றுக் கொண்டனர்.
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரிபிரிவில் திங்கட்கிழமை தொடக்கம் வரும் எதிர்வரும் வியாழன் வரை (30/08/2021-02/09/2021) நான்கு நாட்களுக்கு (காலை 8.00 மணி தொடக்கம் 4.00 மணி வரை ) தடுப்பூசி செலுத்தும் பணி இடம்பெறவுள்ளதாக தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார் .
இதன்படி கல்முனை பகுதியில் கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலை , அல்- மிஸ்பாஹ் மகா வித்தியாலயம் , அல் - பஹ்ரியா தேசிய பாடசலை, கல்முனை அல்- அஸ்ஹர் வித்தியாலயத்திலும் , மருதமுனை பகுதியில் அல் - மனார் மத்திய பாடசாலை , அல்- மதீனா வித்தியாலயத்திலும் பெரிய நீலாவனை பகுதியில் ஷரீப்புதீன் வித்தியாலயத்திலும் ,நற்பிட்டிமுனை பகுதியில் அல் அக்ஸா மகாவித்தியாலயத்திலும் என கல்முனை தெற்கு சுகாதார பிரிவில் 08 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள்ஏற்பாடாகி, இடம்பெற்று வருகிறது .
பொதுமக்கள் சிரமமின்றி இலகுவாக தடுப்பூசியை பெற்றுக் கொள்ளும் முகமாக தெற்கு சுகாதார பிரிவில் கிராமசேவகர் ரீதியாக பிரிக்கப்பட்டு பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்ட குறித்த தினங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள்ஒழுங்கமைக்கப்பட்டிருந்தமைஇங்கு குறிப்பிடத்தக்கது.
தெற்கு சுகாதார வைத்திய அதிகா
ரி அலுவலக அதிகாரிகள், மேற்பார்
வை பொது சுகாதார பரிசோதகர் ,பொதுசுகாதார பரிசோதகர்கள், கு
டும்ப நல உத்தியோகத்தர்கள், செயலணி பயிற்சியாளர்கள் ஆகியோர்கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
Post a Comment
Post a Comment