ஆய்வுப் பணிகளுக்காக நோர்வே செல்லும் செல்வி. ரவீனா சுகுமாருக்கு வாழ்த்துக்கள்!




 


மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தின் உறுப்பினரும், ஒன்றியத்தின் விஞ்ஞான பரீட்சைகள் மையத்தின் வளவாளருமான செல்வி. ரவீனா சுகுமார் அவர்கள் நோர்வே நாட்டின் Agder பல்கலைக்கழகத்திற்கு ஆய்வு பணிக்காக யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் யாழ் பல்கலைக்கழத்தின் இரசாயனவியல் துறையில் முதன்மை மாணவியாக தேர்வாகிய படியால் இந்த அரிய வாய்ப்பினை பெற்றுள்ளார்.
இந்த 06 மாத ஆய்வு கற்கை நெறியில் செல்வி. ரவீனா நோர்வே நாட்டு விஞ்ஞானிகளுடன் பணியாற்றவுள்ளார்.
மேலும் இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் இரசாயனவியல் துறையின் உதவி விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
இவருடைய ஆய்வு பயணம் மற்றும் கற்கைநெறி சிறப்பாக நடைபெற மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.