கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கை இன்று (01) முதல்




 


அரசாங்கத்தால் வழங்கப்படும் கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கை இன்று (01) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்காக நாட்டிலுள்ள அனைத்து தபால் மற்றும் உப தபால் நிலையங்களும் இன்றும் (01) நாளையும் (02) திறந்திருக்குமென தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கொவிட் ஒழிப்பு தேசிய செயலணி மற்றும் பொலிஸ்மா அதிபருடன் இணைந்து கலந்துரையாடி இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்திற்கான கொடுப்பனவுகளை பெறாதவர்களுக்காக மாத்திரம் இன்றும் நாளையும் தபால் மற்றும் உப தபால் நிலையங்களை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ஓய்வூதிய கொடுப்பனவு உள்ளிட்ட அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவுகளை பெற தகுதி பெற்றோர் மாத்திரம் தபால் நிலையங்களுக்கு வருகை தந்து அதனை பெற்றுக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.