அக்கரைப்பற்று பிராந்தியத்தில் இன்று நீர் வெட்டும் மின்வெட்டும் அமுல்




 



அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பிராந்திய நீர வழங்கல் வடிகால் அமைப்புச் சபையின் கீழ் இயங்கும் அக்கரைப்பற்று மற்றும் ஆலையடிவேம்புப் பகுதிகளுக்கான நீர்வெட்டானது இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை அமுலாகின்றது.


திருத்த வேலைகளாலும் மின் வெட்டு அமுலாவதாலும் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் குறுந் தகவல் செய்தி அறிவித்துள்ளது.