2004 ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியான சரத் அம்பேபிட்டியவை படுகொலை செய்த பொட்ட நவுபர் என்பவர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பாதாள உலக தலைவர்களில் ஒருவரான மொஹமட் நியாஸ் நவுபர் அலியாஸ் (பொட்ட நவுபர்), சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளார்.
கொவிட் தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே, அவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொவிட் தொற்றுக்கு உள்ளானதை அடுத்து, புஸா சிறைச்சாலையிலிருந்து வெலிகட சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே, அவர் உயிரிழந்துள்ளார்.
Post a Comment
Post a Comment