பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் நோக்குடன் இராணுவத்தினரின் பங்களிப்புடன் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணனின் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஐ.எம் கபீர் தலைமையில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்களும் பாதுகாப்பு துறையினரும் இணைந்து இன்று (29) சம்மாந்துறை பிரதேசத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட முதலாவது தடுப்பூசி இதுவரை பெறாத நபர்கள், தடுப்பூசி நிலையங்களுக்கு வந்து தடுப்பூசியினை பெற முடியாதவர்களுக்கான தடுப்பூசி வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் பணி தற்போது இடம் பெற்று வருகின்றது.
.
தங்களின் வீட்டில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் இதுவரை முதலாவது தடுப்பூசி பெறாமல் இருந்தால் உங்களது கிராம சேவகர் பிரிவுக்கு பொறுப்பான கிராம நிலதாரியிடம் தொடர்பு கொண்டு தகவலினை வழங்கி பதிவு செய்து கொள்ளுங்கள் உங்களது வீடுகளுக்கே வந்து தடுப்பூசியினை வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். என சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஐ.எம் கபீர் இதன்போது மக்களுக்கு தெரிவித்தார்.
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள், பாதுகாப்பு படை வீரர்கள், பொதுசுகாதார பரிசோதகர்கள், கிராம நிலைதாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், செயலணி பயிற்சியாளர்கள் என பலரும் கலந்துகொண்டு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மேலும் 60 வயது மேற்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் ,கிராம சேவகர் ரீதியாக பிரிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மும்முரமாக இடம்பெற்றுவருவதையும் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசிகளை செலுத்துவதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.
Post a Comment
Post a Comment