வி.சுகிர்தகுமார் 0777113659
ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பிரிவுகளில் வாழும் கர்ப்பிணி; தாய்மார்களுக்கான இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டன.
இதேநேரம் ஏதோ ஒரு தடுப்பூசியினை ஏற்றிக்கொள்ளாத 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கான முதலாவது தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டன.
பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.அகிலன் தலைமையில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை மற்றும் கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயம் பனங்காடு பிரதேச வைத்தியசாலை உள்ளிட்ட இடங்களில் முன்னெடுக்கப்பட்ட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தாதிய உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் இணைந்திருந்தனர்.
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 30 வயதிற்கு மேற்பட்ட 95 வீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டுள்ளதுடன் 60 வயதிற்கு மேற்பட்ட சிலர் இன்னும் தடுப்பூசியினை ஏற்றிக்கொள்ளவில்லை என புள்ளிவிபர தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இதேநேரம் முதலாவது தடுப்பூசியினை ஏற்றிக்கொண்டவர்கள் இரண்டாவது தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள காத்திருக்கின்றனர்.
இந்நிலையிலேயே அனைவருக்கும் தடுப்பூசியினை பெற்றுக்கொடுத்து அனைவரையும் இத்தொற்றிலிருந்து காப்பாற்ற சுகாதாரத்துறை அர்ப்பணிப்போடு செயலாற்றி வருகின்றது.
இதன் அடிப்படையிலேயே இன்று இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் இரண்டாவது தடுப்பூசியினை வழங்கும் முன்னேற்பாடுகளை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment