பாராலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு இரண்டாவது பதக்கம்
பாராலிம்பிக் போட்டியில் இலங்கை இன்று ஒரே நாளில் இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது.
எப் 64 பிரிவின் கீழ் ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேப்ப துலான் கொடித்துவக்கு, வெண்கல பதக்கம் கிடைத்தது. அவர் 65.61 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து, வெண்கல பதக்கத்தை வெற்றி கொண்டுள்ளார்.
2020ம் ஆண்டு டோக்யோ பரா ஒலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஏ.எப்..46 பிரிவில் போட்டியிட்ட தினேஷ் பிரியந்த ஹேரத், ஈட்டி எறிதல் போட்டியில் இன்று புதிய உலக சாதனையை நிலைநாட்டினார்.
67.79 மீட்டருக்கு ஈட்டியை எறிந்து அவர் இன்று சாதனையை நிலைநாட்டி தங்கப்பதக்கத்தை வெற்றிக் கொண்டார்.
Post a Comment