ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபான்கள் சூழ்ந்துள்ள இந்நிலையில், ஜனாதிபதி அஷ்ரப் கனி, நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 10 நாட்களில், அரச படைகள் பெரும் பின்னடைவை சந்தித்தனர். இதனையடுத்து, மாகாண ஆளுநர்கள், தமது அதிகாரங்களை தாலிபான்களிடம் கையளித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஆப்கானிஸ்தானின் புதிய இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக அலி அஹ்மத் ஜலாலி நியமிக்கப்படவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. அலி அஹ்மத் ஜலாலி, 2003 முதல் 2005 வரை ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சராக பதவி வகித்தவர். 2017 ஜனவரி முதல் 2018 ஒக்டோபர் வரை ஜேர்மனிக்கான ஆப்கானிஸ்தான் தூதுவராகவும் அவர் பதவி வகித்திருந்தார்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு பல்வேறு நாடுகளும் தங்களின் விமானங்களை அனுப்பி தங்கள் நாட்டு மக்கள் தூதுரக அதிகாரிகள் எனப் பலரையும் பாதுகாப்பாக அழைத்துவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தலிபான்கள் ஆட்சி அமைந்துவிட்டால் வேற்று நாட்டவர்களுக்கு குறிப்பாக முஸ்லிம் அல்லாதவர்களுக்கு கடுமையான நெருக்கடி ஏற்படும் என்ற எச்சரிக்கை இருப்பதால் பல்வேறு நாடுகளும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Post a Comment
Post a Comment