ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர விசேட வேலைத்திட்டம்





ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. 

சுமார் 50 இலங்கையர்கள் ஆப்கானிஸ்தானில் வசிப்பதாக வௌிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஓய்வுபெற்ற அட்மிரல் ஜயநாத் கொழம்பகே தெரிவித்தார். அவர்களில் பெரும்பாலானோர் இலங்கைக்கு திரும்புவதற்கான விமான பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். ஆப்கானிஸ்தானிலுள்ள இலங்கை தூதரகத்தில் தற்போது யாரும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு பல்வேறு நாடுகளும் தங்களின் விமானங்களை அனுப்பி தங்கள் நாட்டு மக்கள் தூதுரக அதிகாரிகள் எனப் பலரையும் பாதுகாப்பாக அழைத்துவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தலிபான்கள் ஆட்சி அமைந்துவிட்டால் வேற்று நாட்டவர்களுக்கு குறிப்பாக முஸ்லிம் அல்லாதவர்களுக்கு கடுமையான நெருக்கடி ஏற்படும் என்ற எச்சரிக்கை இருப்பதால் பல்வேறு நாடுகளும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.