35 வயதுக்குள் 100 படங்களுக்கு மேலாக இசையமைத்தவர்,யுவன் சங்கர் ராஜா
இன்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பிறந்தநாள். அவரைப் பற்றிய 10 சுவாரசியமான தகவல்களை தொகுத்து அளிக்கிறோம்.
பாடல்களுக்கு உலக தர வரிசை பட்டியல் அளிக்கும் 'பில் போர்ட்ஸ்', கடந்த ஆண்டு 2019 ஆம் ஆண்டு இவர் இசையமைத்த 'ரௌடி பேபி' பாடலுக்கு 4 ஆம் இடம் அளித்திருந்த்து.
கடந்த 2019 ஆம் ஆண்டு 'யூடியுப்' வெளியிட்ட தரவரிசை பட்டியலில், 'ரௌடி பேபி' பாடல் வீடியோவுக்கு உலக அளவில் 7வது இடமும், இந்திய அளவில் முதல் இடமும் அளிக்கப்பட்டிருந்தது.
1997ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான 'அரவிந்தன்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர், யுவன் சங்கர் ராஜா.
அரவிந்தன் திரைப்படத்திற்குதான் முதன்முதலாக தமிழ் சினிமாவில் 'டிரெய்லர்' வெளியிடப்பட்டது. அதற்கான இசையை தனது இவர் வடிவமைத்தார். அந்த படத்திற்கு ஒப்பந்தமான போது யுவன் சங்கர் ராஜாவுக்கு வயது 14.
Yuvan Shankar Raja
பட மூலாதாரம்,RAJA YUVAN/ TWITTER
இசையமைப்பாளர், பாடகர் என்பதைத் தாண்டி 'பியார் பிரேமா காதல்', ' கொலையுதிர் காலம்' போன்ற படங்களுக்கு தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார்.
முறையான இசை வகுப்புகளுக்கு செல்லாதவர் யுவன் சங்கர் ராஜா, 35 வயதுக்குள் 100 படங்களுக்கு மேலாக இசையமைத்தவர்.
தமிழகத்தில் கதாநாயகர்களுக்கு இணையான இளம் ரசிகர்கள் நடத்தும் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இவரது பிறந்த நாளுக்கு கட்டவுட்டுகள் வைத்து கொண்டாடப்படுவது வழக்கம்.
தனது தந்தையை விட தாய் மீது அதிக அளவிலான பாசம் கொண்டவராகவே யுவன் தன்னை வெளிப்படுத்துபவர். தனது தாய் பிறந்த தினத்திலேயே தனது மகள் 'ஜியா' பிறந்ததை பெருமையாக நண்பர்களிடம் பேசுவார்.
நா.முத்துக்குமார் மீது அளவு கடந்த பாசமிக்கவராக இருந்த இவர், தனது அலுவலகத்தில் முத்துக்குமாருக்கேன்றே தனி அறையும் ஒதுக்கியிருந்தார்.
2006ஆம் ஆண்டு சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ராம் படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதைப் பெற்றார் யுவன். 2004ஆம் ஆண்டில் '7ஜி ரெயின்போ காலனி' படத்திற்காக பிலிம்ஃபேர் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றிருக்கிறார் யுவன்.
Post a Comment
Post a Comment