வி.சுகிர்தகுமார் 0777113659
சுவிஸ் நாட்டின் சுக் மாநிலத்தில் உள்ள ஸ்ரீசுக் சித்தி விநாயகர் அறக்கட்டளையின் அனுசரணையில் அக்கரைப்பற்று கோளாவில் அம்மன் மகளிர் இல்ல மாணவிகளுக்கான ஒரு தொகை ஆடைகள் வழங்கி வைக்கப்பட்;டது.
அம்பாரை மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற நிகழ்வில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் கலந்து கொண்டு ஆடைகளை வழங்கி வைத்தார்.
சுவிஸ் லுக்சன் மாநிலத்தை சேர்ந்த விக்கி விதுஸ் எனும் 8 வயதே நிரம்பிய மாணவன் ஒருவரின் பிறந்த தினத்தை முன்;னிட்டே இப்பொருட்கள் அவரது குடும்பத்தால் இங்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அம்மன் மகளிர் இல்ல பணிப்பாளர் வாமதேவன் மற்றும் சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர் ப.சிறிதரன் உள்ளி;ட்டவர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது மாணவர்கள் மத்தியில் உரையாற்றி மேலதிக அரசாங்க அதிபர் கல்வி ஒன்றினால் மாத்திரமே நாம் பல விடயங்களை சாதிக்க முடியும் எனவும் இங்கு வாழும் மாணவர்கள் முறையாக கல்வி பயின்று வாழ்க்கையில் பல சாதனைகள் படைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Post a Comment
Post a Comment