கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் நோக்குடன் இராணுவத்தினரின் பங்களிப்புடன் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணனின் நெறிப்படுத்தலில் கல்முனை வடக்கு மற்றும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் பணி தற்போது இடம் பெற்று வருகின்றது.
இந்த வகையில் கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.கணேஸ்வரன் தலைமையிலும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஏ. ஆர். எம். அஸ்மி லைமையிலும் கல்முனைப் பிராந்திய இராணுவ மேஜர் சாந்த விஜேயகோன் வழிகாட்டலில் அலுவலக உத்தியோகத்தர்கள் கல்முனை பிரதேசத்தில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதலாவது தடுப்பூசி இதுவரை பெறாத நபர்கள்இ தடுப்பூசி நிலையங்களுக்கு வந்து தடுப்பூசியினை பெற முடியாதவர்களுக்கான தடுப்பூசி வீடுகளுக்கு நேரடியாக சென்று செலுத்தும் நடவடிக்கை இன்று (28) இடம்பெற்றது.
இதன் போது கல்முனை வடக்கு மற்றும் தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள், பொதுசுகாதார பரிசோதகர்கள், செயலணி பயிற்சியாளர்கள் என பலரும் கலந்துகொண்டு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
Post a Comment
Post a Comment