பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
இராணுத்தினருடன் இணைந்து சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.அல் அமீன் றிசாட் தலைமையில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்களும் இன்று (27) சாய்ந்தமருது பிரதேசத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட முதலாவது தடுப்பூசி இதுவரை பெறாதவர்களுக்கும் மற்றும் தடுப்பூசி நிலையங்களுக்கு வந்து தடுப்பூசியினை பெற முடியாதவர்களுக்குமான தடுப்பூசி வீடுகளுக்கு வீடு சென்று வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது வீட்டில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் இதுவரை முதலாவது தடுப்பூசி பெறாமல் இருந்தால் உங்களது கிராம சேவகர் பிரிவுக்கு பொறுப்பான கிராம சேவை அதிகாரியினை தொடர்பு கொண்டு தகவலினை வழங்கி பதிவு செய்து கொள்ளுங்கள் உங்களது வீடுகளுக்கே வந்து தடுப்பூசியினை வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். கிடைக்கும் சந்தர்ப்பத்தினை தவற விடாமல் தடுப்பூசியே கொவிட்-19 கொரோணாவை ஒழிக்க ஒரே ஒரு வழி என்பதனையும் மறந்து கொள்ளாதீர்கள் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.அல் அமீன் றிசாட் மக்களுக்கு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
மேலும் இந்த செயற்பாட்டில் கல்முனைப் பிராந்திய இராணுவ மேஜர் சாந்த விஜேயகோன், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள், பாதுகாப்பு படை வீரர்கள், பொதுசுகாதார பரிசோதகர்கள், கிராம நிலைதாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், செயலணி பயிற்சியாளர்கள் என பலரும் கலந்துகொண்டு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாட்டில் வெகுவாக அதிகரித்துவரும் கொரோனா அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் அதன் ஒரு கட்டமாக இதுவரை கொவிட்-19 தடுப்பூசி பெறாத 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கற்பிணி தாய்மார்களுக்கும் தடுப்பூசிகள் சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், சம்மாந்துறை, கல்முனை, நாவிதன்வெளி போன்ற சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களின் ஏற்பாட்டில் பல்வேறு மத்திய நிலையங்களில் வருகிறமை குறிப்பிடத்தக்கது.
இது தவிர சாய்ந்தமருது மக்கள் வங்கிக்கு அருகில் இன்று(27) மாலை 20 பி.சி.ஆர் பரிசோதனைகள் மற்றும் 15 அன்டீஜன் பரிசோதனைகள் எழுந்தமான முறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.இதி ல் எடுக்கப்பட்ட அன்டீஜன் பரிசோதனையில் இருவர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் யாவும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படும் என பிரதம பொதுச்சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதன் போது வீட்டில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் இதுவரை முதலாவது தடுப்பூசி பெறாமல் இருந்தால் உங்களது கிராம சேவகர் பிரிவுக்கு பொறுப்பான கிராம சேவை அதிகாரியினை தொடர்பு கொண்டு தகவலினை வழங்கி பதிவு செய்து கொள்ளுங்கள் உங்களது வீடுகளுக்கே வந்து தடுப்பூசியினை வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். கிடைக்கும் சந்தர்ப்பத்தினை தவற விடாமல் தடுப்பூசியே கொவிட்-19 கொரோணாவை ஒழிக்க ஒரே ஒரு வழி என்பதனையும் மறந்து கொள்ளாதீர்கள் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.அல் அமீன் றிசாட் மக்களுக்கு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
மேலும் இந்த செயற்பாட்டில் கல்முனைப் பிராந்திய இராணுவ மேஜர் சாந்த விஜேயகோன், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள், பாதுகாப்பு படை வீரர்கள், பொதுசுகாதார பரிசோதகர்கள், கிராம நிலைதாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், செயலணி பயிற்சியாளர்கள் என பலரும் கலந்துகொண்டு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாட்டில் வெகுவாக அதிகரித்துவரும் கொரோனா அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் அதன் ஒரு கட்டமாக இதுவரை கொவிட்-19 தடுப்பூசி பெறாத 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கற்பிணி தாய்மார்களுக்கும் தடுப்பூசிகள் சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், சம்மாந்துறை, கல்முனை, நாவிதன்வெளி போன்ற சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களின் ஏற்பாட்டில் பல்வேறு மத்திய நிலையங்களில் வருகிறமை குறிப்பிடத்தக்கது.
இது தவிர சாய்ந்தமருது மக்கள் வங்கிக்கு அருகில் இன்று(27) மாலை 20 பி.சி.ஆர் பரிசோதனைகள் மற்றும் 15 அன்டீஜன் பரிசோதனைகள் எழுந்தமான முறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.இதி
Post a Comment
Post a Comment