நுகர்வோர் அதிகார சபையினால் சுற்றிவளைப்பு




 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினால்  பல நெல் களஞ்சியசாலை மற்றும் அரிசி களஞ்சியசாலை மீது திடீர் சுற்றிவளைப்பு நேற்று (26) மேற் கொள்ளப்பட்டது.
 
நேற்று தலைமைக் காரியாலயத்திலிருந்து வருகை தந்த நூகர்வோர் அலுவல்கள் அதிகார தலைவர் (ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல்) சாந்த திஸாநாயக்க தலமையில் நிறைவேற்று பணிப்பாளார் சாலிய சரத் குமார வழிகாட்லில் அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி சாலிந்த பண்டார நவரத்ன மற்றும் நூகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரிகளினால் அட்டாளைச்சேனை,சென்றல் கேம்,ஒலுவில்,பரகாகல பிரதேசத்தில் இவ் திடீர் சுற்றிவலைப்பு மேற்கொள்ளப்பட்டது.
 
இதன் போது புலன் விசாரணை அதிகாரிகளினால் நெல் களஞ்சியசாலை மற்றும் அரிசி களஞ்சியசாலைகளில் பரிசோதணை மேற்கொள்ளப்பட்டு எச்சரிக்கையுடன் அறிவுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் மேலும் பல நெல் களஞ்சியசாலை மற்றும் அரிசி களஞ்சியசாலைகளுக்கு எதிராக நீதிமன்றதினுடாக வழக்கு தொடரப்பட்டது