லியோனல் ஆண்ட்ரே மெஸ்ஸி (எசுப்பானிய ஒலிப்பு: [ljoˈnel anˈdɾes ˈmesi]; ஜூன் 24, 1987 -இல் பிறந்தவர்) என்ற இவர் அர்ஜென்டின கால்பந்தாட்ட வீரர் ஆவர், இவர் தற்போது லா லிகா அணி, பார்சிலோனா மற்றும் அர்ஜென்டினா தேசிய அணி ஆகியவற்றுக்காக விளையாடி வருகிறார். இந்த தலைமுறையின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவராக மெஸ்ஸி கருதப்படுகிறார், 21 வயதிற்குள்ளாகவே பல விருதுகளுக்கான, பால்லோன் டி'ஆர் மற்றும் உலகிலேயே ஆண்டின் சிறந்த வீரருக்கான ஃபிஃபா (FIFA) விருது ஆகியவற்றுக்கான பரிந்துரைகளைப் பெற்றுள்ளார்.
இவருடைய ஆட்ட முறை மற்றும் திறமையின் காரணமாக இவர், கால்பந்தாட்ட சாதனையாளரான டீகோ மாரடோனாவுடன் ஒப்பிடப்படுகிறார், மாரடோனாவும் இவரை தன்னுடைய "வாரிசு" என்றே அறிவித்துள்ளார்.
அர்ஜெண்டினா கால்பந்தாட்ட வீரரான லயோனல் மெஸ்ஸி சுமார் 20 ஆண்டு காலம் இணைந்து பயணித்த பார்சிலோனா கால்பந்தாட்ட கிளப்பில் இருந்து கண்ணீரோடு விடைபெற்றார்.
பார்சிலோனா கிளப் அணியில் தொடர்வதற்கு தன்னால் ஆன அனைத்தையும் செய்ததாக ஸ்பெயின் நாட்டின், பார்சிலோனா நகரின் கேம்ப் நௌ ஸ்டேடியத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
நிதி நெருக்கடியில் தள்ளாடிவரும் பார்சினோனா கிளப், தங்கள் அணி வீரர்களுக்கான சம்பள உச்சவரப்பை வெகுவாகக் குறைத்துவிட்டது. அதற்கு உட்பட்டு மெஸ்ஸியுடன் புதிய ஒப்பந்தத்தை போட முடியவில்லை என்பதால் அவரை தக்கவைத்துக்கொள்ள முடியாது என்று அந்த கிளப் நிர்வாகம் வியாழக்கிழமை அறிவித்தது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த பிரிவுபசார நிகழ்வில் அவர் கண்ணீரோடு பேசியபோது அவரது குடும்பத்தினர், நண்பர்கள் சிலர் அங்கே இருந்தனர்.
''மெஸ்ஸி-PSG இடையேயான ஒப்பந்தம் சீசனுக்கு 35 மில்லியன் யூரோ என இரண்டு வருடங்களுக்கு கையெழுத்தாகவுள்ளதாகவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட இன்னும் சில மணிநேரங்களில் மெஸ்ஸி பாரிஸ் வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Post a Comment
Post a Comment