நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் இன்றும் (28) நாளையும் (29) திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விவசாய இராஜாங்க அமைச்சர் சஷேந்திர ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மொத்த விற்பனைக்காக மாத்திரம் பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் கொழும்பு மெனிங் சந்தையை திறக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பொருளாதார மத்திய நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்ய அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதார மத்திய நிலையங்களின் முகாமையாளர்களுடன் தொடர்புகொண்டு தங்களுக்கான பொருட்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு விவசாய இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
Post a Comment
Post a Comment