#பெரண்டினா நிறுவனம் அக்கரைப்பற்று பராமரிப்பு நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்களை வழங்கி வைப்பு




 



வி.சுகிர்தகுமார் 0777113659  


  அரசாங்கத்துடன் அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களும் இணைந்து கொவிட் அவசரகால இடர்முகாமைத்துவ உதவி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இதன் அடிப்படையில் பெரண்டினா நிறுவனம் அதன் கொவிட் 19 அவசரகால இடர்முகாமைத்துவ உதவித்திட்டத்தின் கீழ் பல உதவிச் செயற்பாடுகளை மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டம் உள்ளடங்களாக 9 மாவட்டங்களில் இயங்கிவரும் சிறுவர், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பராமரிப்பு இல்லங்களுக்கும், கொவிட் 19 சிகிச்சை மற்றும் பராமரிப்பு நிலையத்திற்;கும்,   வருமைக்கோட்டிற்குற்பட்ட தனது பயனாளிகள் குடும்பங்களுக்கும் மாவட்ட செயலகங்கள் மற்றும் அரச திணைக்களங்களுடன் இணைந்து வழங்கி வருகின்றது.

இச்செயற்திட்டத்தின் ஓர் அங்கமாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின்கீழ் இயங்கி வரும் அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலையில் இயங்கிவரும் கொவிட் 19 சிகிச்சை மற்றும் பராமரிப்பு நிலையத்திற்;கு உடனடி தேவையான ரூபா. 870,000 பெறுமதியான மருத்துவ மற்றும் மருத்துவம்சாரா உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வபா தலைமையில் இடம்பெற்ற உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வில் , கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜி;  சுகுணன் கலந்து கொண்டு வைத்திய உபகரணங்களை கையேற்றார்.

நிகழ்வில் கல்முனை பிராந்திய கொவிட் சிகிச்சை மற்றும் பராமரிப்பு நிலைய பொறுப்பாளர் வைத்தியர் மாகீர், பெரண்டினா நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் எஸ். விஐpந்தன்  பிரதேச முகாமையாளர் மற்றும் சமூக அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர்கள் கிளை உத்தியோகத்தர்கள் என சிலர் கலந்துகொண்டனர்.

இதே தினம் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் கீழ் இயங்கி வரும் கரடியனாறு மற்றும் வாகரை கொவிட் சிகிச்சை மற்றும் பராமரிப்பு நிலையங்களிற்கும் உடனடி தேவையான ரூபா. 750,000  பெறுமதியான மருத்துவ மற்றும் மருத்துவம்சாரா உபகரணங்கள் பெரண்டினா நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.