ஆலையடிம்பில் கொரோனா தொற்று தொடர்பில், தெளிவூட்டல் நிகழ்வு




 


வி.சுகிர்தகுமார் 0777113659  


  கொரோனா தொற்று தொடர்பில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் கருத்தரங்கு ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் தெளிவூட்டப்பட்டனர்.

சபையின் தவிசாளர் த.கிரோஜாதரன் தலைமையில் சுகாதார நடைமுறைகளுடன் இடம்பெற்ற கருத்தரங்கில் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார பதில் வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் கலந்து கொண்டு விளக்கமளித்தார்.

கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் சபையில் நடந்து கொள்ள வேண்டிய முறை மற்றும் சுகாதார வழிமுறைகள் தொடர்பிலும் விளக்கினார்.

மேலும் மக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வு கருத்துக்களை கொண்டு செல்ல வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பில் விளக்கினார்.

இதேநேரம் கொரோனா காலகட்டத்தில் பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட சபையினர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு வழங்கிய ஒத்துழைப்பிற்கும் நன்றி தெரிவித்தார்.