அசாத் சாலியின் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனையிலிருந்து நீதியரசர் A.H.M.D நவாஸ் விலகல்




 


முன்னாள் மேல் மாகாண ஆளுநரான அசாத் சாலியினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனையிலிருந்து உயர் நீதிமன்ற நீதியரசர் A.H.M.D நவாஸ் விலகியுள்ளார்.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான முர்து பெர்னாண்டோ, எஸ். துரைராஜா மற்றும் ஏ.எச்.எம்.டி. நவாஸ் ஆகியோர் முன்னிலையில் இன்று (10) இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தனிப்பட்ட காரணங்களுக்காக மனு மீதான பரிசீலனையிலிருந்து விலகுவதாக நீதியரசர் A.H.M.D நவாஸ் இன்று (10) அறிவித்ததை தொடர்ந்து, மனு மீதான பரிசீலனை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அசாத் சாலி கடந்த மார்ச் 9 ஆம் திகதி ஊடக சந்திப்பில் தெரிவித்த கருத்து தொடர்பில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், தடுத்துவைக்கப்பட்டுள்ள தன்னை விடுதலை செய்யுமாறு உத்தரவிடுமாறு கோரி அசாத் சாலி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.