கரீபியன் தீவில் ஒன்றான ஹைட்டியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அலாஸ்காவிலும் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆகப் பதிவாகியுள்ளதோடு, ஹைட்டியின் போர்ட்-அயு பிரின்ஸில் இருந்து 118 கி.மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்.
மேலும், அமெரிக்காவின் அலாஸ்காவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானதாகவும், இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இன்றைய நிலநடுக்கம் ஏற்படுத்திய பாதிப்புகளைக் காட்டும் புகைப்படங்கள் அங்கு வசிக்கும் மக்கள் பலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
Post a Comment
Post a Comment