2021ம் ஆண்டின் 17ம் இலக்க கொரோனா வைரஸ் தொற்று நோய் 2019 (கொவிட்-19) (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம்
மேற்படி சட்டம் 2021-08-23ம் திகதி பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது
இந்தச்சட்டம் எதற்காக?
கோவிட் தொற்று சூழ்நிலை காரணமாக
1. வழக்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஏற்பட்ட காலதாமதங்களை கையாள்தல் தொடர்பான விஷேட தற்காலிக நடைமுறைகளை தாபிப்பதற்கு- விதித்துரைக்கப்பட்ட காலப்பகுதிகளுடன் ஒத்திசைவதற்கு இயலாமல் இருப்பததற்கான நிவாரணம்
2. வழமைபோன்று தொழிற்படமுடியாதுள்ள நீதிமன்றம் ஒன்றுக்குப் பதிலாக அருகிலுள்ள நீதிமன்றம் ஒன்றினை மாற்று நீதிமன்றமாக குறித்தொதுக்குவதற்கான ஏற்பாடுகள்
3. தொலைத்தொடர்பாடல் தொழில்நுட்பங்களைப்பயன்படுத்தி நீதிமன்ற நடவடிக்கைகளை நடாத்துதல்
இச்சட்டத்தின் செயற்படுகாலம்
2020-03-01ம் திகதியிலிருந்து 2 வருடங்களுக்கு மட்டும் வலுவிலிருக்கும்
ஆயினும் தேவையேற்படின் ஒரு தடவையில் 2 வருடங்களுக்கு மேற்படாதவகையில் செற்படுகாலம்ட நீடிக்கப்படலாம்
விதித்துரைக்கப்பட்ட காலப்பகுதிகளுடன் ஒத்திசைவதற்கு இயலாமல் இருப்பததற்கான நிவாரணம்
வழக்கு நடவடிக்கை ஒன்றை ஆரம்பிப்பதற்கு அல்லது நடைமுறையிலுள்ள வழக்கொன்றில் நடவடிக்கை எடுப்பதற்கு அல்லது மேன்முறையீடு செய்வதற்காக சட்டத்தினால் குறித்துரைக்கப்பட்டுள்ள காலப்பகுதிக்குள் கோவிட் சூழ்நிலை காரணமாக நடவடிக்கை எடுக்க முடியாமல் போயிருப்பின் அது பற்றி உரிய நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்யமுடியும். அவ்வாறான விண்ணப்பத்தின்மீது குறித்த மன்று திருப்தியுற்றால் ஆகக்கூடியது 12மாதங்கள் கால விலக்களிக்க முடியும், விசேட காரணங்களின்மீது இது மேலும் 6 மாதங்களுக்கு அதிகரிக்கப்படலாம் எவ்வாறாயினும் மொத்தமாக 18 மாதங்களுக்கு மாத்திரமே விலக்களிக்கப்படமுடியும்.
தன்னால் குறித்த காலத்தினுள் இயங்கமுடியாமைக்கு கோவிட் சூழ்நிலைலைமையே காரணம் என எண்பிக்கவேண்டியது குறித்த விண்ணப்பத்தை மேற்கொள்பவரின் பொறுப்பாகும்.
கோவிட் சூழ்நிலைலைமை காணப்பட்டது என்பதற்கு அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்கள், சுற்றறிக்கைகள் என்பன போதுமான சான்றுகளாகக் கொள்ளபப்டும்
மாற்று நீதிமன்றங்களை குறித்தொதுக்குதல்
கோவிட் சூழ்நிலைலைமை காரணமாக ஏதாவது நீதிமன்றமொன்றில் வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் உள்ள சந்தர்ப்பத்தில் அந்நீதிமன்ற வழக்குகளை அண்மையிலுள்ள நீதிமன்றமொன்றில் நடாத்திச் செல்வதற்கான ஏற்பாடுகளை நீதிச்சேவை ஆணைக்குழு செய்யமுடியும்
குறித்த வழக்குகள், நிலைமை சீரானதும் உரிய நீதிமன்றத்துக்கு மாற்றப்படமுடியும்.
தொலைத்தொடர்பாடல் தொழில்நுட்பங்களைப்பயன்படுத்தி நீதிமன்ற நடவடிக்கைகளை நடாத்துதல்
கோவிட் சூழ்நிலைலைமை காரணமாக நேரடியாக நீதிமன்றில் தோன்றுவதற்கு சிரமங்கள் உள்ள சந்தாப்பத்திலும் வழமையான நடைமுறைகளின்படி நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத சந்தர்ப்பத்திலும் தொலைத்தொடர்பாடல் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி நேரலைக்காணொளி அல்லது நேரலை தொலைக்காட்சி இiணைப்புகள் மூலம் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியும்.
சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ்
Post a Comment
Post a Comment