கடல் அரிப்பை தடுக்க 12 மில்லியன் செலவில் நிந்தவூர் பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கும் வேலைகள்




 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


 
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் கடற்கரை சார்ந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுக்கும் முகமாக  கரையோரம் பேணல் திணைக்களத்தினால் 100 மீட்டர் நீளத்துக்கு  கற்களை கொண்டு தடுப்புச்சுவர் அமைக்கும் வேலைகள் ஆரம்பமாகி  இடம்பெற்று வருகின்றது.

முதற் கட்டமாக இத்திட்டம் நிந்தவூர்  கடற்கரை சிறுவர் பூங்கா அமைந்துள்ள பகுதிக்கு முன்னால் இருந்து ஆரம்பமாகியுள்ளது.

இதற்கென  12 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட உள்ளதுடன்  இது மீன்பிடி நடவடிக்கைகள் நடைபெறாத பகுதிகளில் தற்போது நடைமுறைப்படுத்தபட்டு வருகின்றன.

மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படுகின்ற  பகுதிகளில் கற்களை கொண்டு தடுப்பு சுவர் அமைப்பது அவர்களின் நாளாந்த தொழிலுக்கு தடையாக அமையும் என்பதனால் கரையோரம் பேணல் திணைக்களத்தினால் இப்பகுதியில் (Geo bag)  மண் மூடைகள் இடுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளன.

ஜியோ பேக் (GeoBag)  பைகளில் மண் இட்டு நிரப்பி  கடல் அரிப்பை தடுக்கும் முறைகள் எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து கரையோரம் திணைக்களத்தினால் 25 மில்லியன் ரூபாய் செலவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.