காபூல் விமான நிலைய தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் 11 பேர் பலி




 




காபூல் விமான நிலையத்துக்கு வெளியே இன்று மாலை தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது. அங்கு 11 பேர் பலியாகியிருக்கலாம் என்று தாலிபன் தெரிவித்துள்ளது.

காபூல் விமான நிலையத்தின் அப்பி நுழைவாயில் பகுதியில் இரண்டு தாக்குதல்கள் நடந்துள்ளதாக பிபிசி பாதுகாப்பு விவகாரங்கள் செய்தியாளர் ஜோனாத்தன் பீல் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த சமீபத்திய தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினார்கள்.