நிந்தவூர் பிரதேச சபையின், 04 வது சபையின் 41 வது கூட்டமர்வு




 




பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)




அம்பாறை மாவட்டம்  நிந்தவூர் பிரதேச சபையின் 2021 ஆகஸ்ட் மாதத்திற்கான 04 வது சபையின் 41வது கூட்டமர்வு செவ்வாய்க்கிழமை(24)  நடைபெற்றது.

நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம் தாஹீர்   தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில்  நடைபெற்ற கூட்டமர்வுவின் போது     மத அனுஸ்டானம்  இடம்பெற்ற பின்னர்   2021 ஜுலை    மாதத்திற்கான கூட்டறிக்கை உறுதிப்படுத்தல்  2021 ஜுலை  மாதத்திற்கான கணக்கறிக்கை உறுதிப்படுத்தல்   தவிசாளர் எம் .எ . எம் . தாஹிர்  உரை என்பன தொடர்ச்சியாக  இடம்பெற்றன.

பின்னர் நிந்தவூர் பகுதியில் தற்போதைய பொது முடக்கம் தொடர்பில் ஒத்துழைப்பு வழங்குதல் கொவிட்-19 நிலைமை தொடர்பில் உறுப்பினர்களின் கருத்துக்கள் சபையில் தவிசாளரினால் கேட்கப்பட்டது.அத்துடன் அபிவிருத்தி வேலைத்திட்டங்களான வெளவாலோடை கடற்கரைப்பூங்கா கலாச்சார மண்டபம் தொடர்பில் ஆராயப்பட்டது.

இறுதியாக உப தவிசாளர் வை.எல்.சுலைமாலெப்பையின் முன்மொழிவுகள் உறுப்பினர் ஏ.அப்துல் வாகிதுவின் முன்மொழிவுகள்    இக்கூட்ட அமர்வில்   கலந்துரையாடப்பட்டதுடன் உள்ளிட்ட  கடிதங்கள் வாசிக்கப்பட்டு   தீர்மானங்களும் பெறப்பட்டு  சபை நடவடிக்கை கொரோனா விதிமுறைக்கமைய சிறப்பாக நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.