மருதமுனை மக்களுக்கான முதலாம் கட்ட நிவாரணங்கள் இன்று




 



(சர்ஜுன் லாபீர்) 


கொரோனாவினால் பாதிக்கப்பட்டு கடந்த 03ம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்ட மருதமுனை-03 கிராம சேகவர் பிரிவு மக்களுக்கான முதல் கட்ட நிவாரண பகிர்ந்தளிப்பு இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள்ளது. 


இந் நிவாரணம் பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி, கணக்காளர் யூ.எல்.ஜவாஹிர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர் சாலீஹ்,சமூர்த்தி முகாமையாளர் சட்டத்தரணி எம்.எம் முபீன்,நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர் யூ.எல் பத்துருத்தீன்,நிதி உதவியாளர் எம்.ஐ.ஏ ரகுமான்,பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.ஏ இத்ரீஸ்,கிராம.சேவகர் எம்.எஸ்.ஏ கையூம்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்

எம் ஹமீஸ்,சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.பி

எம் நவாஸ்,எம்.எஸ்.எம் நாஸீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.