#NIBRAS
கடந்த 4 நாட்களாக (வெள்ளி, திங்கள், செவ்வாய், புதன்) சம்மாந்துறையிலுள்ள பிரதான தபால் காரியாலயத்திற்கு பரீட்சை கட்டணம் ஒன்றை செலுத்துவதற்காக அலைந்து கொண்டிருக்கின்றேன். ஆனாலும் அங்குள்ள ஊழியர்களின் அலட்சியமான பதிலும், நிகழ்நிலை முறைமையில் (Online System) பரீட்சைக்கட்டணம் செலுத்துவதற்கு பொறுப்பாக உள்ள ஊழியரின் அசமந்த போக்கும் மிகவும் அதிருப்தி அளிக்கின்றது.
பொதுமக்களுக்கு சேவை வழங்குவதற்காகவே இவ்வாறான அலுவலகங்களை பிரதேசத்திற்கு பிரதேசம் அரசு நிர்மாணித்துள்ள போதும் ஊழியர்களது அசமந்த போக்கினால் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் உரிய சேவை வழங்கப்படுவதில் தடைகள் காணப்படுகின்றது.
இன்று அப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித்திகதியாக காணப்படுவதால் இன்று காலை 9 மணிக்கும் அவ் அலுவலகத்திற்கு சென்றிருந்தேன் அங்கிருந்த ஊழியர் ஒருவர் பரீட்சைக்கட்டணம் செலுத்துவதற்கு பொறுப்பாக உள்ள நபர் 9.30 க்கு பின்னரே அலுவலகத்திற்கு சமூகமளிப்பார் எனவும் அதற்கு பின்னர் வருமாரும் கூறினார்.
பொதுவாக இவ்வாறான போட்டிப் பரீட்சைகள் அனைத்திற்கும் தாம் ஒன்லைன் மூலமாக வீட்டிலிருந்து கட்டணம் செலுத்துவதற்கான முறைமையை அரசு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். அத்தோடு வினைத்திறனான ஊழியர்களையும் எதிர்காலத்தில் வேலைக்கு அமர்ந்த வேண்டியதும் அவசியமாகும்.
இது சம்பந்தமாக நான் இலங்கை அஞ்சல் திணைக்களத்திற்கு மின்னஞ்சல் மூலமாக அறிவித்துள்ளேன். அதற்கான சாதகமான பதிலையும் எதிர்பார்கின்றேன். இது முற்று முழுதாக பொது மக்கள் இனிவரும் நாட்களில் வினைத்திறனான சேவையை பெறுவதற்கும் என்னைப் போல் இன்னும் பலர் அலைக்கழிக்கப்படாமல் இருப்பதற்காகவே இப் பதிவு.
இது சம்பந்தமாக நான் இலங்கை அஞ்சல் திணைக்களத்திற்கு மின்னஞ்சல் மூலமாக பின்வருவோருக்கு அறிவித்துள்ளேன்.
1. Mr. Ranjith Ariyaratne - Post Master General
2. Mr. D.A.Rajitha K. Ranasinghe - Deputy Postmaster General (Operations)
3. Mr. K.A.N.P Kandanaarachchi - Deputy Postmaster General (Administration)
4. Ms. Jayanandi Tiruchelwam - Deputy Postmaster General (Eastern Province)
Post a Comment
Post a Comment