பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
கடந்த ஜூலை 25 அன்று கிழக்கு மாகாண ஆளுநர் அனுரதா யஹம்பத் தலைமையில் அம்பாறை பகுதியில் இடம்பெற்ற சேதனைப்பசளை தொடர்பான கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள விமர்சனத்திற்கு பதிலளிக்கையில் இன்று(27) இரவு அம்பாறை நகர தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
மேலும் தமது கருத்தில் தெரிவித்ததாவது
இலங்கையை ஒரு முழுமையான சேதனைப் பசளை கொண்ட விவசாய நாடாக மாற்றுவதற்கான எமது ஆதரவினை தெரிவிக்கின்றோம்.எனினும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுரதா யஹம்பத் பிழையாக வழிநடாத்தி எம்மை குழப்பும் செயற்பாட்டில் உள்ளார்.கடந்த 25 ஆம் திகதி அன்று சேதனை பசளை தொடர்பான கூட்டத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் புறக்கணித்திருந்தோம்.இந்த முடிவு எமது தனிப்பட்ட முடிவு.சிலர் சொல்வது போன்று அரசியல் நிகழ்ச்சி நிரல் இல்லை.
சில ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் நாம் இக்கூட்டத்திற்கு வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க கருத்துபடி மேற்படி கூட்டத்தை புறக்கணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது உண்மைக்கு புறம்பானதாகும்.எனவே இந்த இரசாயன உர பயங்கரவாதத்தை ஒழிக்க ஜனாதிபதி எடுத்த முடிவு மிகவும் மதிப்புமிக்கது.ஜனாதிபதியால் எடுக்கப்பட்ட நடவடிக்கையை வலுப்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.சேதனைப் பசளை உற்பத்தியினை ஊக்குவித்து எமது நாட்டை கட்டியெழுப்புவோம்.ஆளுநரின் செயற்பாடு காரணமாகவே இத்திட்டம் ஸ்தம்பிதமடைந்துள்ளது என தெரிவிக்க விரும்புகின்றோம் என்றனர்.
இச்செய்தியாளர் சந்திப்பில் தமண பிரதேச சபை தவிசாளர் மங்கள மஹிந்த குணவர்த்தண நாமலோய பிரதேச சபை உறுப்பினர் சொர்ணலதா தமண பிரதேச சபை தவிசாளர் வெருண பிரஹீத் நாமலோய பிரதேச சபை தவிசாளர் பாலித புஸ்பகுமார உகண பிரதேச சபை உறுப்பினர் ரஞ்சித் ஏக்கநாயக்க அம்பாறை நகர சபை பிதா ஹலும் குமார பெணான்டோ உள்ளிட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தத்தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

Post a Comment
Post a Comment