விண்ணப்பிக்காதோர் விண்ணப்பிக்கலாம், கிராம அலுவலர் போட்டிப் பரீட்சைக்கு





ஞாபகமூட்டல்


கிராம அலுவலர் போட்டிப்பரீட்சை 2021


விண்ணப்ப முடிவுத்திகதி 19.07.2021 ஆகும்


உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் கிராம அலுவலர் தரம் IIIக்கான போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன


(ONLINE மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்)


COMPETITIVE EXAMINATION FOR RECRUITMENT TO GRADE III OF GRAMA NILADHARI –2020(2021)


கல்வித் தகைமைகள்


1️⃣ முதன் மொழியாக சிங்களம் அல்லது தமிழ் மொழிகளில் ஏதாவதொரு மொழியிலான பாடம்  மற்றும் கணிதம் உள்ளிட்ட குறைந்தபட்சம் நான்கு (04) பாடங்களில் திறமைச் சித்தியுடன் ஆறு (06) பாடங்களில் ஒரே தடவையில் கல்விப் பொதுத் தராதரப் பத்திர ( சாதாரண தரம்) பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்


மற்றும்


2️⃣ கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர் தரப்) பரீட்சையில் சகல பாடங்களிலும் ( பொது அறிவுப் பரீட்சை மற்றும் பொது ஆங்கிலம் தவிர்ந்த) ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல வேண்டும். பழைய பாடத்திட்டத்தின் கீழ் (03) பாடங்களில் சித்தியடைந்திருத்தல் போதுமானதாகும்.


✅ வயதெல்லை : 21 - 35


போட்டிப்பரீட்சை பாடங்கள்


1️⃣ மொழித் திறன் 

2️⃣ பொது அறிவு மற்றும் உளச்சார்பு


🌐 முழுமையான விபரங்களுக்கு : https://bit.ly/3vUu8k5


முடிவுத்திகதி : 19.07.2021