வி.சுகிர்தகுமார் 0777113659
பயணத்தடை காரணமாக தமது தொழிலை இழந்த மக்களின் வாழ்க்கை நிலையினை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் வகையில் பல்வேறு சமூக அமைப்புக்கள் பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்கி வருகின்றது.
இச்செயற்பாட்டில் சமாதானமும் சமூகப்பணி அமைப்பும் இணைந்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரதேசங்களுக்கும் சென்று உலர் உணவுப்பொதிகளை வழங்கி வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் 30 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகளை வழங்கியது
சமாதானமும் சமூகப்பணி அமைப்பின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளரதும் உறுப்பினர்களதும் வேண்டுகோளுக்கமைய இப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கான மேற்பார்வை நடவடிக்கையினை த.கயிலாயபி;ள்ளையின்; மேற்கொண்ட நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கான 30 பொதிகள் பிரதேச செயலகத்தின் கணக்காளர் க.பிரகஸ்பதியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இவ்வாறு கிடைக்கப்பெற்ற உலர் உணவுப்பொதிகள் யாவும் நாவற்காடு வாச்சிக்குடா உள்ளிட்ட கிராமங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு மக்களிடம் கையளி;க்கப்பட்டது.
Post a Comment
Post a Comment