கல்முனை தேசிய பாடசாலைகளுக்கு விஜயம் செய்த கருணா அம்மான்





 பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)




தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின்  தலைவரும்  முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சரும்  பிரதமரின் மட்டு அம்பாறை விசேட அமைப்பாளருமான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்  கல்முனை பகுதியில் உள்ள இரு வேறு தேசிய  பாடசாலைகளுக்கு விஜயம் செய்துள்ளார்.


இன்று  கல்முனை உவெஸ்லி தேசிய பாடசாலை அதிபர்   எஸ்.கலையரசன் அழைப்பின் பெயரில் சென்றதுடன் குறித்த பாடசாலை பௌதீக வளங்கள் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டார்.அத்துடன் கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸினை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு பாடசாலையின் முக்கிய கட்டடம் ஒன்றினை நிர்மாணிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி நிறைவேற்றி கொடுத்துள்ளார்.

பின்பு கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய    பாடசாலைக்கு  அதிபர் அருட்சகோதரர் சந்தியாகு அழைப்பின் பேரில் அங்கு    விஜயம் செய்து மாணவர்களுக்கான குறைபாடுகளை கேட்டறிந்து  அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ரப்  வசதி தங்களுக்கு கிடைக்கவில்லையென பாடசாலை நிர்வாகம் தெரிவித்ததற்கு அமைய    தொலைபேசி ஊடாக மீண்டும்  கல்வி அமைச்சரைத் தொடர்புகொண்டு  ரப் வழங்குவதற்கான முன்னெடுப்புகளைச் செய்து கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.