வி.சுகிர்தகுமார் 0777113659
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதான வீதியின் நாவற்காடு பிரதேசத்தில் அதிகாலை பூப்பறித்த பெண்ணொருவரின் மாலையினை பறிக்க முற்பட்ட கள்வன் தனது போனை தவறவிட்டுச் சென்ற சம்பவம் இன்று பதிவானது.
சம்பவத்தில் பெண் தன்னை சுதாகரித்துக்கொண்டு மாலை காப்பாற்றியதுடன் திருடனின் போனையும் கைப்பற்றினார்.
வழக்கம்போல் குறித்த பெண் அதிகாலை நேரம் வீதியோரம் பூப்பறித்து கொண்டிருந்தபோது வீதியால் வந்த திருடன் மாலை பறிக்க எத்தணித்துள்ளான். இந்நிலையில் குறித்த பெண் பூப்பறிக்க கையில் வைத்திருந்த கம்பால் அடித்து தடுக்க முற்பட்டபோது கள்வன் தனது போனையும் விட்டு விட்டு சென்றுள்ளான்.
இது தொடர்பில் குறித்த பெண் மற்றும் அவரது தம்பி உட்பட அக்கரைப்பற்று பொலிசாரிடம் முறைப்பாடு செய்ததுடன் கைப்பற்றப்பட்ட கைத்தொலைபேசியையும் ஒப்படைத்தனர். இந்நிலையில் பொலிசார் மற்றும் சம்மந்தப்பட்டவர்களின் சமயோகித புத்தியால் ஒரு சில மணித்தியாலங்களில் போனுக்குரியர்; என அடையாளம் காணப்பட்டவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் புத்திசாதுரியமாக செயற்பட்ட பெண் மற்றும் அவரது சகோதரர் விரைந்து செயற்பட்ட பொலிசார் உள்ளிட்டவர்களை மக்கள் பாரட்டுகின்றனர்.

Post a Comment
Post a Comment