( சர்ஜுன் லாபீர், எம்.என்.எம்.அப்ராஸ், றாசிக் நபாயிஸ்)
சமாதானமும் சமூகப்பணி நிறுவன அனுசரணையுடன் இயங்கி வரும் கல்முனை பிரதேச நல்லிணக்க மன்றத்தின் விஷேட ஒன்றுகூடல் அம்பாறை மாவட்ட நல்லிணக்க மன்றத்தின் இணைப்பாளர் எஸ்.எல்
அப்துல் அஸீஸ் தலைமையில் கல்முனையில் இன்று (11) இடம் பெற்றது.
இதன் போது அமைப்பின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் குறிப்பாக கொரானா விழிப்புணர்வு மற்றும் நல்லிணக்கம் தொடர்பான செயற்திட்டங்கள் மேற்கொள்ளவுள்ளதாகவும் சமாதானமும் சமூகம் பணியின் இணைப்பாளர், ரீ. ராஜேந்திரன் கருத்துரைத்தார் .
அம்பாறை மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தின் தீர்மானத்திற்கமைய நல்லிணக்கம் தொடர்பான வேலைத்திட்டங்கள் பிரதேச ரீதியாக மேற்கொள்ளப்படவுள்ளது என அம்பாறை மாவட்ட நல்லிணக்க மன்றத்தின் இணைப்பாளர் கலாநிதி, எஸ்.எல். அப்துல் அஸீஸ் இங்கு தெரிவித்தார்.
அத்துடன் அமைப்பின் அங்கத்தவர்களினால் நல்லணக்க வேலைத்திட்டம் பற்றி தமது கருத்துக்களை தெரிவித்தனர். குறித்த ஒன்று கூடல் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் எம்.இர்பான் உட்பட அமைப்பின் நல்லிணக்க மன்றங்களின் உயர்பீட உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment