ஆலையடிவேம்பு,பிரிவில் 5பேர் கொரோனா தொற்றாளர்கள்




 


வி.சுகிர்தகுமார் 0777113659  


ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர்  பிரிவில் இன்று மட்டும் 5பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.அகிலன் தெரிவித்தார்.

இதில் 4பேர் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை மூலமும் ஒருவர் இன்று இடம்பெற்ற அன்ரிஜன் பரிசோதனையிலும் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதேநேரம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் கோளாவில்-03, நாவற்காடு ஆலையடிவேம்பு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மேலும் கொழும்பு உள்ளிட்ட வெளிப்பிரதேசங்களுக்கு சென்றுவருவதையும் இயன்றளவில் தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் ஆலையடிவேம்பு இதுவரையில் 85பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட நிலையிலும் 3 மரணங்கள் சம்பவித்துள்ள நிலையிலும் 3ஆவது அலையின் பின்னர் 34 பேர் இனங்காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க பிசிஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனைகள் அதிகரிக்கப்படும் நிலையில் தொற்றாளர்களின் அடையாளப்படுத்தலும் அதிகரிக்கலாம் என சுகாதாரத்துறையினர் அச்சம் கொண்டுள்ள நிலையில்  பொதுமக்கள் வீணான நடமாட்டம் மற்றும் ஒன்று கூடல் நிகழ்வுகளை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டனர்