"எனக்கு மூன்று முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதுவும் இரண்டு டோஸ்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிறகு இரு முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டேன். என்னால் நம்ப முடியவில்லை. இது எப்படி சாத்தியம்?"
26 வயதாகும் மருத்துவர் ஸ்ருஷ்டி ஹெலரிக்கு கடந்த 13 மாதங்களில் மூன்று முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது
அதில் குறிப்பாக கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு-இன் இரண்டு டோஸ்களும் போட்டுக் கொண்ட பிறகு இரு முறை தொற்றால் பாதிக்கப்பட்டார்.
தடுப்பூசி எடுத்துக் கொள்வதால் கொரோனா வராமல் இருக்கும் என்று கூற முடியாது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆனால்,தொற்று ஏற்படுத்தும் பாதிப்பை தடுப்பூசி குறைக்க உதவும்.
மக்கள் தொகையில் மிக மிகக் குறைவானவர்களே தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளதாக இந்திய அரசு கூறுகிறது.
மும்பையில் உள்ள வீர் சாவர்கர் மருத்துவமனையில் பணியில் இருந்தார் மருத்துவர் ஸ்ருஷ்டி ஹெலரி. மும்பை மாநகராட்சியால் நடத்தப்பட்ட மீதாகர் கோவிட் மையத்தின் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது.
"கடந்த மார்ச் 8ஆம் தேதி என் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டேன். இரண்டாவது டோஸ் எப்ரல் 29ஆம் தேதி எடுத்துக் கொண்டேன்" என்கிறார் ஸ்ருஷ்டி.
உ.பி-யில் பிராமண பெண்ணை மணந்த தலித் இளைஞர் பட்டப் பகலில் கொலை
'அம்மை நோயைப் போல பரவும் தன்மை கொண்ட கொரோனாவின் டெல்டா திரிபு' - 10 தகவல்கள்
ஆனால், இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒரே மாதத்தில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
"மே 29ஆம் தேதி எனக்கு கொரோனா பாசிட்டிவ் ஆனது. அது எனக்கு இரண்டாவது முறை. பிறகு ஜூலை 11ஆம் தேதி மூன்றாம் முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டேன்"
மகாராஷ்டிராவில் கொரோனா இரண்டாம் அலை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. ஏப்ரல் மே மாதங்களில் கொரோனாவின் டெல்டா திரிபு மிக வேகமாக பரவியது.
"நான் கொரோனாவின் புதிய திரிபால் பாதிக்கப்பட்டேன் என்று நினைக்கிறேன். வைரஸ் மிக வேகமாக திரிபு அடைகிறது" என்கிறார் ஸ்ருஷ்டி.
கடந்த மே மாதம் மருத்துவர் ஸ்ருஷ்டிக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தன.
அந்த நேரத்தில்தான், வைரசின் பல புதிய திரிபுகள் பல இடங்களில் கண்டறியப்பட்டன. பின்னர் அவர் தனது மருத்துவரின் அறிவுரையின் பேரில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.
"நான் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டதால் எனக்கு கொரோனா பாதிப்பு வராது என்று நினைத்தேன். சாதாரண காய்ச்சலாக இருக்கும் என எண்ணினேன்" என்று ஸ்ருஷ்டி கூறுகிறார். அவருக்கு காய்ச்சலோடு லேசான சளியும் இருமலும் இருந்தது.
"எனக்கு இரண்டாவது முறை கொரோனா பாசிட்டிவ் என்று முடிவு வந்த போது, பரிசோதனை முடிவில் ஏதேனும் தவறு நடந்திருக்கலாம் என நினைத்தேன்" என்று கூறிய ஸ்ருஷ்டிக்கு சில நாட்களில் வாசனையை உணர முடியாமல் போனது.
மூன்றாவது முறை பாதிப்பு
ஸ்ருஷ்டி ஒருவழியாக கொரோனாவில் இருந்து மீண்டு பணியில் சேர இருந்த நிலையில்தான் அவருக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.
"என் குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே இரண்டு டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டு விட்டனர். 21 நாட்களும் முடிந்தது. அதனால் உடலில் கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகள் (நோய் எதிர்ப்பான்கள்) உருவாக தொடங்கியிருக்கும்."
இந்நிலையில்தான் ஸ்ருஷ்டிக்கு மூன்றாவது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்த முறை அவரது மொத்த குடும்பமும் தொற்று பாதிப்புக்கு ஆளாகியது.
"இந்த முறை எந்த தெளிவான அறிகுறிகளும் இல்லை. ஆனால், எனக்கு பல முறை தொற்று ஏற்பட்டதால், நான் மருத்துவமனையில் என்னை அனுமதித்துக் கொண்டேன். இந்த முறை கொரோனா மீண்டும் வராமல் இருக்க அனைத்து சிகிச்சைகளையும், ஆன்டி வைரல் மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டாம் முறை ஏற்பட்ட கொரோனா வைரசின் மறுசெயல்பாடுதான் இது என்று நினைக்கிறேன்" என்கிறார் மருத்துவர் ஸ்ருஷ்டி.
முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் மீண்டும் தொற்று ஏற்படும் பாதிப்பு உள்ளது. அதனால்தான் ஸ்ருஷ்டி மருத்துவமனையில் தன்னை அனுமதித்துக் கொண்டார்.
மூன்றாம் முறையாக தொற்று - அச்சமாக இருந்ததா?
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு, இரு முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டது, அச்சத்தை ஏற்படுத்தியதா என்று ஸ்ருஷ்டியிடம் கேட்டோம்.
அதற்கு பதிலளித்த அவர், "நானே கொரோனா வார்டில் பணியாற்றி உள்ளேன். தீவிர கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளேன். எனக்கு எந்த பயமும் இல்லை. ஆனால், என் குடும்ப உறுப்பினர்களை நினைத்துத்தான் பதற்றமாக இருந்தேன். என் சகோதரருக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டது" என்று கூறினார்.
எனினும், ஸ்ருஷ்டியின் குடும்பத்தினர் வெற்றிகரமாக கொரோனாவில் இருந்து மீண்டு விட்டனர்.
ஆய்வுக்கு அனுப்பப்படும் ஸ்ருஷ்டியின் மாதிரி
ஜூன் 2020ல் முதன் முதலில் ஸ்ருஷ்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவர் கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனையில் பணியாற்றியபோது அவருக்கு பாதிப்பு ஏற்பட்டது. 13 மாத காலத்தில் அவர் மூன்று முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில் ஸ்ருஷ்டியின் மாதிரிகள் மரபணு வரிசைமுறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன.
"என் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. கொரோனாவின் புதிய திரிபால் பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்" என்கிறார் ஸ்ருஷ்டி.
'தடுப்பூசி போட்டதால் தப்பித்தோம்'
மூன்று மாதங்கள் கோவிட் மையத்தில் பணியாற்றி, மூன்று முறை கொரோனாவில் இருந்து மீண்ட ஸ்ருஷ்டி, தற்போது படிப்பிற்கான விடுப்பில் உள்ளார்.
"நானும் என் குடும்பமும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் பாதுகாப்பாக மீண்டு வந்தோம். எங்கள் நுரையீரலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை" என்று அவர் தெரிவித்தார்.
கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சுவாசப் பிரச்னையை அதிகம் எதிர்கொள்கிறார்கள். சிலருக்கு நுரையீரல் முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது. ஆனால், ஸ்ருஷ்டியின் குடும்பத்தினர் இதுபோன்ற பிரச்னைகளை சந்திக்கவில்லை.
கொரோனா தடுப்பூசி நல்ல பலன் அளிப்பதாக கூறுகிறார் மருத்துவர் ஸ்ருஷ்டி
சர்வதேச விண்வெளி நிலையத்தில் திடீர் தீ: உள்ளே இருந்தவர்கள் நிலை என்ன?
ஒலிம்பிக் பதக்கம் உறுதி: லவ்லீனாவின் 'சார்பட்டா' வெற்றி சாத்தியமானது எப்படி?
தடுப்பூசி போட்டபின் கொரோனா தொற்று
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் கொரோனா வராது என்று கூற இயலாது என்கின்றனர் வல்லுநர்கள்.
"தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு தொற்று ஏற்பட்ட பல நோயாளிகளை நான் பார்த்திருக்கிறேன். எந்த வயதினராக இருந்தாலும், அவர்களுக்கு கொரோனா வரலாம்" என்கிறார் மும்பையின் வாக்ஹர்ட் மருத்துவமனையின் மருத்துவ வல்லுநரான பெஹ்ரம் பார்டிவாலா.
எனினும் அவர்கள் மீது கொரோனா தொற்றின் தாக்கம் குறைவாக இருப்பதாக அவர் கூறுகிறார். குறைந்த அறிகுறிகளோடு, நோயாளிகள் விரைவில் குணமாகிறார்கள்.
இந்திய அரசின் தரவுகள் படி, இரண்டு டோஸ்கள் கோவேக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 0.04 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதே போல இரண்டு டோஸ் கோவிஷீல்ட் போட்டுக் கொண்ட மக்களில் 0.03 சதவீதம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment